நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, அந்த பணி நியமன உத்தரவு போலி என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பேரூராட்சி செயல் அலுவலரும், இதுபோல எந்த நியமன உத்தரவையும் வழங்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

போலி பணிநியமன உத்தரவை தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, திருப்பூர் டி.எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்குவதற்காக நியமிக்கப்பட்ட தன்னிடம், பேரூராட்சி தலைவர் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கேட்ட போது, அதை வழங்க இயலாததால், அந்த பணியில் லதா என்பவரை நியமித்துள்ளதாகக் கூறி, குப்புசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அத்துடன், தனக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, அந்த பணி நியமன உத்தரவு போலி என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பேரூராட்சி செயல் அலுவலரும், இதுபோல எந்த நியமன உத்தரவையும் வழங்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

இதையடுத்து, இதுசம்பந்தமாக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணை பின், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, திருப்பூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

போலி பணிநியமன உத்தரவை தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, திருப்பூர் டி.எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்குவதற்காக நியமிக்கப்பட்ட தன்னிடம், பேரூராட்சி தலைவர் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கேட்ட போது, அதை வழங்க இயலாததால், அந்த பணியில் லதா என்பவரை நியமித்துள்ளதாகக் கூறி, குப்புசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அத்துடன், தனக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, அந்த பணி நியமன உத்தரவு போலி என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பேரூராட்சி செயல் அலுவலரும், இதுபோல எந்த நியமன உத்தரவையும் வழங்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

இதையடுத்து, இதுசம்பந்தமாக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணை பின், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, திருப்பூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...