நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முல்லைப் பெரியார் அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அவர்களின் நிலைப்பாடு என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோரிய வழக்கு…

*வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலர் சுரங்கப்பாதை அமைத்தது தொடர்பான ஆய்வின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*

மதுரையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “07.05.2014 – ல் நீதிமன்றம் பெரியாறு அணையில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை 2 பலப்படுத்தியபின் முழுக் கொள்ளலவான 152 அடி நீர்தேக்கி கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கிறது .

அதன்பின் 2014 ஆண்டிலிருந்து 142 அடிக்குமேல் வரும் தண்ணீர் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரளா பகுதிக்கு வீணாக திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகப் பகுதிக்கு தேக்கடி ஷட்டரிலிருந்து 1958 – லிருந்து சுரங்கப்பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இந்த தண்ணீர் லோயர் கேம்பு மின்உற்பத்திக்கு 4 ராட்சதகுழாய் வழியாகவும் , இறைச்சல் பாலம் வழியாகவும் வெளியேறும். இதைவிட கூடுதல் நீர் திறக்க வாய்ப்பில்லை.

எனவே, தமிழகப் பகுதிக்கு மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து இதைவிட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால் வீணாக கேரள பகுதிக்கு தண்ணீர் வெளியேற வேண்டிய அவசியமில்லை.

எனவே, 07.05.2014 உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழக பகுதிக்கு மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க 2 – வது சுரங்கப்பாதை அமைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் லோயர் கேம்பில் இருந்து இராமநாதபுரம் வரை 259 கி.மீ. தூரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது.

எனவே, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், முல்லைப் பெரியார் அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ஆய்வு குழு அமைக்கப்பட்டது. அவர்களின் நிலைப்பாடு என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில், சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளதால். ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலர் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பான ஆய்வின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்

——-

*புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததாக புளியங்குடி நகராட்சி அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரிய வழக்கு…*

*மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து அரசு தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புளியங்குடியைச் சேர்ந்த முகமது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில், “ஆதிதிராவிடரான நான், கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் இதே பகுதியில் ஒரு நிலம் வாங்கினேன். அந்த நிலத்தில் நானும், எனது கணவரும் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த பணத்தின் மூலம் செங்கல் சூளை தொடங்கி நடத்தி வருகிறேன். இந்த நிலத்தின் அருகில் நாராயபேரி ஊரணி, இலந்தைகுளம் ஊரணி, மயானம் உள்ளிட்டவை உள்ளன.

இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தை நாங்கள் ஆக்கிரமித்து செங்கல் சூளை நடத்துவதாகவும், அங்கு அளவீடு செய்ய வேண்டும் என்றும் புளியங்குடி நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நாங்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. நீர்நிலைகளையும், புறம்போக்கு பகுதிகளையும் உண்மையிலேயே ஆக்கிரமித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நாங்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இது சட்டவிரோதம்.
எனவே, எங்களுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். உண்மையிலேயே புறம்போக்கு நிலத்தையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்தந்த பகுதிகளை சர்வேயர் மூலம் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து அரசு தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You may also like...