நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி. தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், தமிழகத்தில் மணல் கடத்தல் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் முன்பு நேற்று
மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி. தாக்கல் செய்த
அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், தமிழகத்தில் மணல் கடத்தல்
கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது. ஆனால், செல்வாக்கு இல்லாத வலிமை
இழந்தோர் மீது வழக்குகளை பதிவு செய்து, அவர்களை போலீசார் குண்டர்
தடுப்புச் சட்டத்தில் கைது செய்கின்றனர்ÕÕ என்று வேதனை கருத்து
தெரிவித்தனர்.
எத்தனை வழக்குகள்
ÔÔஒரு போலீஸ் நிலையம் அதிகார எல்லைக்குள் மணல் கடத்தப்படுகிறது என்றால்
அங்கு பணியில் உள்ள போலீஸ் துணை கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர்
ஆகியோருக்கு தெரியாமல் நடக்குமா? வருவாய் துறையில் வட்டார வருவாய்
அதிகாரிகள், தாசில்தார் ஆகியோருக்கும் மணல் கடத்தப்படுவது தெரியாதா? இந்த
அதிகாரிகள் எல்லாம் மணல் கடத்தப்படுவதை தெரிந்தும் தடுக்காமல் உள்ளனர்.
அதனால் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக இவர்கள் மீது ஏன்
வழக்குப்பதிவு செய்யக்கூடாது? அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தால்
தான் மணல் கடத்தலை தடுக்க முடியும்ÕÕ
என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், ÔÔபோலீஸ் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், அரசியல்வாதிகள்
ஆகியோருக்கு எதிராக எத்தனை மணல் கடத்தல் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன?Õ என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல்
குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...