தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே திண்டிவனத்தில் 8வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி நகராட்சி தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே திண்டிவனத்தில் 8வது வார்டு கவுன்சிலர் எனக்கூறி
நகராட்சி தண்ணீர் தொட்டியில் கல்வெட்டு வைத்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டில் உள்ள ரவிச்சந்திரன் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி உள்ள நகராட்சி குடிநீர் தொட்டியை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் வைத்து திறந்தாகவும், பிறகு அங்கு உள்ள கல்வெட்டில் தன்னை எட்டாவது வார்டு உறுப்பினர் எனக்கூறி பெயர் பெறிக்கபட்டதாகவும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்படவில்லை. வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுத்துள்ளது.

சட்டத்திற்கும், விதிகளுக்கு புறம்பாக அரசு தண்ணீர் தொட்டியில் வார்டு உறுப்பினர் என கூற ரவிச்சந்திரன் பெயர் பலகை வைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கடந்த மாதம் 10 தேதி தான் தமிழக அரசு மற்றும் திண்டிவனம் நகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எனது புகார் மீது கால வரையறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். எம்.சுப்ரமணிய முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக, தமிழக அரசு, திண்டிவனம் நகராட்சி ஆணையர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

You may also like...