Cj bench திருச்சி டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம், உரிமம் அளிக்கப்பட்ட பகுதியை தாண்டி குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதன் உரிமத்தை நிறுத்தி வைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  1. திருச்சி டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம், உரிமம் அளிக்கப்பட்ட பகுதியை தாண்டி குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதன் உரிமத்தை நிறுத்தி வைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனம், அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்துக்கு அருகில் குவாரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அந்த குவாரிகளில் இருந்து கனிமப் பொருட்களை டிப்பர் லாரிகள் மூலம் தங்கள் கிராமத்தின் வழியாக கொண்டு செல்வதால், காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுவதாக கூறி, இடையத்தான்குடி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 24 மணி நேரமும் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதால், இரவு நேரங்களில் டிப்பர் லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை ஆய்வு செய்ய அரியலூர் சுற்றுச்சூழல் பொறியாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உரிம விதிகளின்படி குவாரி நடவடிக்கைகள் இருப்பதை உறுதி செய்யவும், உரிம விதிகளை மீறி கூடுதல் பரப்பில் குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டால் டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும் இரவு நேரங்களில் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது என டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...