தமிழக அமைச்சர் துரைமுருகன் ஹை கோர்ட்டில் புதிய மனு

தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவை நிராகரிக்கக் கோரி அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்குமாறு அதிமுக வேட்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள், எண்ணப்படவில்லை என்பது உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிகாட்டி காட்பாடி தொகுதிக சட்டமன்ற உறுப்பினராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் வி ராமு தேர்தல் மனு தாக்கல் செய்துள்ளார்.. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது துறைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி,
குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை என்றும், அதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை என்றும் சமர்பித்தார். அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் எந்த வித ஆதாரங்கள் இல்லாதவை மற்றும் பொதுவானவை என்று அவர் கூறினார். போலி வாக்குகளை நீக்கத் தவறிய வாக்குப்பதிவு இயந்திரத்தில், பதிவான வாக்குகளை விட வேட்பாளர் பெற்ற வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்தால், பழுதடைந்த இயந்திரத்தை எண்ண வேண்டியதில்லை என்று தெரிவித்தார்…
இந்த வாதங்களைக்
கேட்ட நீதிபதி பாரதிதாசன், வழக்கு வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது, நோட்டீஸ் திரும்பப் பெற உத்தரவிட்டார்.

You may also like...