தமிழகத்தில் 2000 – 01ம் ஆண்டுகள் முதல் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு

[2/24, 16:49] Sekarreporter 1: தமிழகத்தில் 2000 – 01 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணை நடத்திய வழக்கில், தமிழக தொழில்துறை செயலாளர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தாதுமணல் எடுப்பதற்காக, ஏழு நிறுவனங்களுக்கு, திருநெல்வேலியில் 52 உரிமங்கள், தூத்துக்குடியில் 6, கன்னியாகுமரியில் 6 என, 64 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்பட்டதாகவும் புகார்கள் தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கு செல்வதற்கு 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாதுமணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி மற்றும் சத்யபிரதா சாஹு தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் அளித்த அறிக்கையில், மூன்று மாவட்டங்களிலும் 234 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கபட்டதும், ஒரு கோடியே 55 லட்சம் டன் இருப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இருப்பில் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
[2/24, 16:49] Sekarreporter 1: [2/24, 11:14] Sekarreporter 1: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழக்கு நாளை தள்ளிவைப்பு

காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்கவும், விளக்கம் அளிக்கவும் அவகாசம் வழங்கி வழக்கு தள்ளிவைப்பு

புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு – மாலைக்குள் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

நீதிபதி எஸ். அல்லி
[2/24, 11:16] Sekarreporter 1: தமிழகத்தில் 2000 – 01ம் ஆண்டுகள் முதல் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக தொழில்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது

அதில், தாதுமணல் எடுப்பதற்காக, ஏழு நிறுவனங்களுக்கு, திருநெல்வேலியில் 52 உரிமங்கள், தூத்துக்குடியில் 6, கன்னியாகுமரியில் 6 என, 64 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து தாது மணல் எடுப்பதற்கு கொண்டு செல்வதற்கும் 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கும் முன்பும், தடை விதித்த பிறகும், சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட 5 ஆயிரத்து 832 கோடியே 44 லட்சம் ரூபாய் இழப்பை, தனியார் தாதுமணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி மற்றும் சத்யபிரதா சாஹு தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக்கள் அளித்த அறிக்கையில், மூன்று மாவட்டங்களிலும் 234 ஹெக்டேர் பரப்பில் ஒரு கோடியே ஒரு லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக எடுக்கபட்டதும், ஒரு கோடியே 55 லட்சம் டன் இருப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இருப்பில் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
[2/24, 11:37] Sekarreporter 1: நாகூர் தர்கா நிர்வாகத்தை கவனிக்க நான்கு மாதங்களுக்கு என குறுகிய காலத்துக்கு நியமிக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளாக தொடர்வது ஏன் என விளக்கமளிக்க தற்காலிக நிர்வாக குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகூர் தர்கா நிர்வாக முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தர்கா நிர்வாகத்தை கவனிக்க நான்கு மாத காலத்துக்கு என்ற அடிப்படையில், ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி அலாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி அக்பர் அடங்கிய தற்காலிக நிர்வாக குழுவை நியமித்து 2017ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், தர்காவின் 465வது உர்ஸ் விழாவில் பங்கேற்க முஹாலி முத்தவல்லி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தர்காவின் தற்காலிக நிர்வாக குழு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வக்பு வாரியம் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாகவும், இந்த தகவலை தற்காலிக நிர்வாக குழுவுக்கு அப்போதே தெரிவித்த போதிலும், தர்காவின் நிதியை தவறாக பயன்படுத்தி இந்த மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு என நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு, இன்னும் தொடர்வது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழுவை கலைப்பது குறித்து மார்ச் 10ம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படியும் உத்தரவிட்டனர். அதுவரை தர்கா விவகாரங்களை மேற்கொள்ள கூடாது என தற்காலிக நிர்வாக குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தர்காவுக்காகவும், தற்காலிக நிர்வாக குழுவுக்காகவும் மேற்கொண்ட செலவு விவரங்களை தாக்கல் செய்ய குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தற்காலிக குழு செய்த செலவு விவரங்களை தாக்கல் செய்ய வக்பு வாரியத்துக்கும் உத்தரவிட்டனர்.

மேல் முறையீட்டு வழக்கு செல்லாததாகி விட்டதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தற்காலிக நிர்வாக குழுவுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை மார்ச் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[2/24, 14:05] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விசாரணை செய்ய 5 நாள் காவல் கேட்டு தண்டையார் பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு.
[2/24, 14:05] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விசாரணை செய்ய 5 நாள் காவல் கேட்டு தண்டையார் பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு.
[2/24, 14:30] Sekarreporter 1: அயல்நாடுகளில் மருத்துவபடிப்பை படிப்பதற்கும், இந்தியாவில் பதிவு செய்வதற்கும் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள விதிகளை எதிர்த்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் 2021ஆம் ஆண்டு விதிகளின் படி அயல்நாடுகளில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டால், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்றும், அதன்பின்னர்12 மாதங்கள் பயிற்சியும் பெற்றிருப்பது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல அயல்நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவில் பதிவு செய்ய, அதற்கான தகுதி தேர்வை எழுதி, புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டுமெனவும் விதிக வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த அரவிந்த் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், மொரீசியஸ் நாட்டில் மருத்துவம் படித்து மருத்துவராகும் கனவிற்கு இந்த விதிகள் இடையூறாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மொரீசியஸ் 36 மாதங்கள் மட்டுமே கல்வி வழங்கப்படும் நிலையில், 54 மாதங்கள் என்பது நிர்ணயித்திருப்பதும், புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரியில் பயிற்சி என்பதும் இடையூறாக இருப்பதால் அந்த விதிகளை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நோயாளிகளின் உயிர் காப்பது தொடர்பான படிப்பை,
விரைவு படிப்பாக படிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில் தான் விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சட்டவிரோதம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளில் சமரசம் செய்ய முடியாது எனக் கூறி, மனுதாரர் அரவிந்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் மொரீசியல் கல்லூரியில் விண்ணப்பம் கூட செய்யாத நிலையில், யூகத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடம், அந்த தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
[2/24, 16:24] Sekarreporter 1: ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் நாளை ஜாமீன் மனுவும் மற்றும் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல்துறை மனுவும் விசாரணைக்கு வர உள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவின் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன், திமுக பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப் படுத்தியது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த விவகாரத்தில் காவல்துறை கள்ள ஓட்டு போட வந்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியது தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராயபுரம் போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 110 பேர் மீது சாலை மறியலில் ஈடுபட்ட தற்காக 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இரண்டு வழக்குகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இதில் திமுக பிரமுகரை தாக்கிய விவகாரத்தில் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் தர மறுத்தது. இன்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக பிரமுகரை தாக்கிய விவகாரத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை சென்னை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஜார்ஜ்டவுன் 16வது கூடுதல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுத்தாக்கல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தயாளன் முன்பு நடந்தது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது போடப்பட்ட 5 சட்டப் பிரிவுகளில் 188, மற்றும் 7(1) (a) எனப்படும் 2 பிரிவுகள்,பிணையில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவு கள், மேஜிஸ்ட்ரேட் அனுமதி இல்லாமல் விசாரணை அதிகாரி வழக்கு போட்டு உள்ளதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது

மீதமுள்ள பிரிவுகள் பிணையில் வெளி வரக் கூடிய சட்டப்பிரிவுகள் என்பதால்,ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே திமுக பிரமுகரை தாக்கிய பிறகு தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்ட தாகவும், அவர் மீது போடப்பட்ட சட்டப்பிரிவுகள் சரியான முறையில் போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேஜிஸ்ட்ரேட் அனுமதி இல்லாமலேயே விசாரணை அதிகாரி வழக்குப் பதிவு செய்ய அதிகாரம் உள்ளதாக வாதங்களை முன்வைத்தார்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தயாளன் முன்னால் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்

இந்நிலையில் திமுக பிரமுகரை தாக்கிய நிர்வாணப் படுத்திய விவகாரத்தில் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் பதினைந்தாவது நீதிமன்றத்தில் தண்டையார்பேட்டை போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி முரளிகிருஷ்ணா ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவர் சிறையில் இருக்கும்போதே காவல்துறை சிறப்பாக விசாரிப்பதாகவும், இந்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க கூறப்படும் காரணங்களை கேட்டறிய வேண்டும் எனவும், மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த மனு மீதான விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை நாளை ஒத்தி வைத்தார். நாளையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக பிரமுகரை தாக்கிய விவகாரத்தில் காவலில் எடுத்து விசாரிக்க போடப்பட்ட மனுவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வரவுள்ளதால், 2 வழக்குகளில் எந்த மாதிரியான உத்தரவு வரும் என எதிர்பார்த்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலும் அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

பேட்டி

நடராஜன்

ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்.

You may also like...