டெண்டர்’ இன்னும் திறக்கவில்லை முதல்-அமைச்சருக்கு எதிராக எப்படி புகார் கொடுத்தீர்கள்? – ஐகோர்ட்டு கேள்வி; தி.மு.க. மனு வாபஸ் ‘டெண்டர்’ இன்னும் திறக்கவில்லை முதல்-அமைச்சருக்கு எதிராக எப்படி புகார் கொடுத்தீர்கள்? – ஐகோர்ட்டு கேள்வி; தி.மு.க. மனு வாபஸ்

[6/19, 14:08] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1273897780059058176?s=08
[6/19, 14:08] Sekarreporter 1: Welcome

மாநில செய்திகள்
‘டெண்டர்’ இன்னும் திறக்கவில்லை முதல்-அமைச்சருக்கு எதிராக எப்படி புகார் கொடுத்தீர்கள்? – ஐகோர்ட்டு கேள்வி; தி.மு.க. மனு வாபஸ்
‘டெண்டர்’ இன்னும் திறக்கவில்லை முதல்-அமைச்சருக்கு எதிராக எப்படி புகார் கொடுத்தீர்கள்? – ஐகோர்ட்டு கேள்வி; தி.மு.க. மனு வாபஸ்

‘டெண்டர்’ இன்னும் திறக்கவில்லை. முதல்-அமைச்சருக்கு எதிராக எப்படி புகார் கொடுத்தீர்கள்? என்று தி.மு.க. தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, முதல்-அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய வழக்கை தி.மு.க. வாபஸ் பெற்றது.
ஜூன் 19, 01:45 AM
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மத்திய அரசின் ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் ‘இன்டர்நெட்’ இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு ஏரியல் வழித்தடம், பாதாள வழித்தடம் உள்ளிட்ட வழிகளில் இணைப்பு வழங்கும் ரூ.1,950 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்களை விலக்கிவிட்டு, 2 நிறுவனங்களுக்கு சாதகமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து

கடந்த மே மாதம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தும், இதுவரை முதல்-அமைச்சர், அமைச்சர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்த 16-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் என்.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில், ‘அரசியல் உள்நோக்கத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேபிள் வழித்தடம் பதிக்கும் ஒப்பந்தம் தொடர்பான ‘இ-டெண்டர்’ இன்னும் திறக்கவில்லை. வருகிற 26-ந்தேதி திறக்கப்பட உள்ளது. தற்போது டெண்டரே திறக்காத போது, எப்படி குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணி ஒதுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரும், துறை அமைச்சரும் நிர்பந்தம் செய்தனர் என்றும் அந்த நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டனர் என்றும் எப்படி குற்றம் சாட்ட முடியும்?‘ என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், ‘ஆர்.எஸ்.பாரதி கொடுத்த புகாரை விசாரித்து குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் புகாரை முடித்து வைத்து விட்டனர். அதுகுறித்து தகவலும் மனுதாரருக்கு தெரிவித்து விட்டனர்‘ என்று அரசு தலைமை குற்றவியல் வக்கீல் நடராஜன் குற்றம் சாட்டி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, ‘டெண்டர் இன்னும் திறக்காதபோது, முதல்-அமைச்சருக்கு எதிராக எப்படி புகார் கொடுத்தீர்கள்?‘ என்று மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய ஊர்களில் சுமார் 462 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள சாலைகள் விரிவாக்கத்துக்காக ரூ.1,165 கோடி மதிப்புள்ள டெண்டரை தமிழக நெடுஞ்சாலைத்துறை கோரியது. இந்த டெண்டரை தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு ஒதுக்கும்படி நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளை நிர்பந்தம் செய்துள்ளதாகவும், இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று கடந்த மே 6-ந்தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டிடம் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கொடுத்தார்.

இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான வக்கீல், மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...