டாஸ்மாக் நிறுவனத்திற்கும் விடுமுறை கோரி மதுரையில் தாக்கல் செய்த வழக்கு WP (MD) No. 380 of 2022, 07.01.2022 அன்று ரிட் நம்பர் வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு 12.01.2022 அன்று தலைமை நீதிபதி அமர்வில் வரிசை எண். 3 ல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்க கோரி.

தலைமை செயலாளர் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்து விடுமுறை அட்டவணை அறிவிப்பார். விடுமுறைகள் பொது விடுமுறை(public holiday) மற்றும் அரசு விடுமுறை(government holiday) என்று இருவகைப்படும். அரசு விடுமுறை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகும். பொது விடுமுறையில் புத்தாண்டு, பொங்கல்,மாட்டுப் பொங்கல், குடியரசு தினம், மொகரம், பக்ரீத், ரம்ஜான், புனித வெள்ளி, கிறுஸ்த்துமஸ், தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மே தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு என விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அந்த அரசு உத்தரவில் இந்த விடுமுறை அறிவிப்பு அனைத்து தமிழக அரசுத் துறைகள்,(Department) தமிழக அரசு பொது நிறுவனங்கள், (Undertakings) போன்ற அனைத்து தமிழக அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் பண்டிகை காலங்களில் விடுமுறை விடாமல் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் தான் இருக்கிறார்கள். பண்டிகை காலங்களில் வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடவே விடுமுறை விடப்படுகிறது. கேரளாவில் ஒவ்வொரு ஆங்கில மாதம் 1 ம் தேதி மது விற்பனை கிடையாது. நிறைய பண்டிகை தினங்களில் மது விற்பனை கிடையாது. டெல்லி, கல்கத்தா, மும்பை உட்பட நிறைய மாநிலங்களில் அனைத்து பண்டிகை தினங்களில் தீபாவளி உட்பட மது விற்பனை கிடையாது. தமிழகத்தில் பண்டிகை தினத்தில் மது அருந்தி நிறைய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. சந்தோசமாக இருக்க வேண்டிய இல்லம் துக்க வீடாக மாறுகிறது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறைகளான பண்டிகை தினங்களில் மற்ற துறைகள் போல், பிற மாநிலங்களில் உள்ளது போல் டாஸ்மாக் நிறுவனத்திற்கும் விடுமுறை கோரி மதுரையில் தாக்கல் செய்த வழக்கு WP (MD) No. 380 of 2022, 07.01.2022 அன்று ரிட் நம்பர் வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு 12.01.2022 அன்று தலைமை நீதிபதி அமர்வில் வரிசை எண். 3 ல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

You may also like...