டாக்டர் சுப்பையா கொலை வழக்கின் மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

 

டாக்டர் சுப்பையா கொலை வழக்கின் மீதான தீர்ப்பை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை என 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மருத்துவர்.சுப்பையா சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 23ல் இறந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் என்ற இடத்தில் உள்ள மதிப்பு மிக்க இடத்தை அடையும் நோக்கில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது அபிராமபுரம் காவல் நிலைய விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் பொன்னுசாமி, மேரி புஷ்பம், பாசில், போரிஸ், வில்லியம், ஏசுராஜன், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வப்பிரகாஷ், ஐயப்பன் என்று 10 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டபட்ட 10 பேர்களில் 2 பேர் வழக்கறிஞர்கள், 2 பேர் ஆசிரியர்கள், ஒருவர் அரசு மருத்துவர், ஒருவர் இன்ஜனியர், மற்றவர்கள் டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது.

நீதிபதி அல்லி முன்பு விசாரணை, வாதங்கள் என அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...