சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் டாக்டர்கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள் இந்த வழக்கில் டாக்டர் சார்பாக வக்கீல் ஜி சங்கரன் ஆஜராகி சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக டாக்டர்களுக்கு வழங்கினால் தான் தமிழக மக்களுக்கு அவர்கள் சேவை செய்யமுடியும் இவர்களுக்கு இட ஒதிக்கீடு கொடுக்காவிட்டால் மற்ற மாநில டாக்டர்கள் படித்துவிட்டு வெளி மாநிலத்துக்கு சென்று விடுவார்கள் எனவே 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வாதாடினார் இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் ஜி சங்கரன் ஆஜராகி அரசாணையின்படி 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அரசு மருத்துவமனைக்கு என்று வாதாடினார் இதைக் கேட்ட நீதிபதி அரசாணையை அமல்படுத்துவீர்களா இல்லையா என்பது குறித்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை தசா விடுமுறைக்கு பிறகு வருகிற 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார் அரசு தரப்பில் அரசு வக்கீல் செல்வேந்திரன் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினார்

You may also like...