சாலையில் சுயநினைவின்றி கிடந்த வாலிபரை தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்க்க உதவிய காவல் பெண் ஆய்வாளரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

[11/12, 21:00] Sekarreporter1: சாலையில் சுயநினைவின்றி கிடந்த வாலிபரை தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்க்க உதவிய காவல் பெண் ஆய்வாளரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சென்னை காவல் துறை மீட்டும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வந்தனர்.

டிபி சத்திரம் காவல் ஆய்வாளரான ராஜேஸ்வரி, ஷெனாய் நகர் கல்லறை சாலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்த போது, அங்கு சுயநினைவின்றி கிடந்த வாலிபர் ஒருவரை மீட்டு தோள் மீது வைத்து கொண்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த மனித நேயமிக்க செயலை பாராட்டு விதமாக ராஜேஷ்வரியை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரியை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

அந்த பாராட்டு பத்திரத்தில், என்பும் உரியர் பிறர்க்கு என ஆற்றிய அரும் பணிக்கு பாராட்டு தெரிவிப்பதாக நீதிபதி அளித்த சான்றில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு கடிதமும், புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.
[11/13, 09:00] Sekarreporter1: கொசஸ்தலை ஆற்றின் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள் முழுவதையும் இரண்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்தி, பொதுப் பணித்துறை பொறியாளரிடம் சான்றிதழ் பெற, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்தை, அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி அமல்படுத்தப்படுவதாகவும், சுற்றுச்சூழல் அனுமதியை மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
கொசஸ்தலை ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்துள்ளதாகவும் கூறி, காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்வழிப்பாதையில் உள்ள கட்டட பொருள்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,
நீர்வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களை அகற்ற நான்கு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், பணிகளை அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்படுமென உறுதியளிக்கும்போது, அதற்கான தொழில்நுட்பங்களைக் நிறுவனங்கள் பெற்றுள்ளதா, இல்லையா என தெரியாதா எனக் கேள்வி எழுப்பி, உரிய காலத்திற்குள் முடிக்காவிட்டால் மின்வாரிய தலைவர் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர்.

மேலும், நீர்நிலைகளில் கொட்டப்பட்டிருக்கும் அனைத்து இடிபாடுகள், கான்கிரீட் பொருட்களை விரைந்து அகற்றி, பொதுப் பணித்துறை பொறியாளரிடமிருந்து சான்றிதழை டான்ஜெட்கோ பெற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஆற்றுப் படுக்கையில் இருந்து தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டதா என்பது குறித்து சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) நீர்வளப் பொறியியல் துறையின் உதவியைப் பெற்று ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தி விசாரணை நவம்பர் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...