சட்டப் படிப்பில் ஆர்வம் கொண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர். முப்பதே வயதான இவர் தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவரும்

    இளம் வேட்பாளர் சுஜிதா ஒரு இன்ஜினியரிங் முதுகலை பட்டதாரி. அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர். சட்டப் படிப்பில் ஆர்வம் கொண்டு சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர். முப்பதே வயதான இவர் தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவரும் ஒரு வழக்கறிஞர். இவரது குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ளனர். மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு சட்டப் படிப்பும், இன்ஜினியரிங் படிப்பும் துணையாக இருப்பதால் சுயேட்சை வேட்பாளராக சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூர் பேரூராட்சியில் உள்ள 9வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். தன்னுடைய எதிர்காலம் பற்றி கேட்டபொழுது இவர் கூறியதாவது இனிமேல் என்னுடைய பணி மக்களுடைய சேவையாக இருக்கும், முதலில் என் வார்டில் உள்ள குறைகளை தீர்ப்பேன் என்றும் அதன்பிறகு பஞ்சாயத்து என்று படிப்படியாக மக்கள் பிரச்சனையை கையாள உள்ளேன் என்று கூறுகிறார். ஒரு கிராமத்திலிருந்து வந்து சுயமாக முன்னேறி மீண்டும் அந்த கிராமத்திற்கே பணியாற்ற செல்வது புதுமையாக உள்ளது. அதுவும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான இவர் பெண்களுக்கெல்லாம் மிகப்பெரிய முன்னுதாரணமாகத் திகழ்கிறார் வேட்பாளர் சுஜிதா.

You may also like...