குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு புதிய தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் மாண்புமிகு பி வேல்முருகன் அவர்கள் வழங்கி உள்ளார்கள்.

குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு புதிய தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் மாண்புமிகு பி வேல்முருகன் அவர்கள் வழங்கி உள்ளார்கள்.

முக்கியமான வழக்கில் குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்காக குற்றம் சுமத்தியரையும் முக்கியமான *அரசு தரப்பு சாட்சிகளையும் விசாரிக்காமலேயே விசாரித்ததாக தானாகவே விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் சி ஆர் பி சி 161 உட்பிரிவு 3 கீழ் தானாகவே வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்*

குற்றம் சுமத்தியவரும் அரசு தரப்பு முதல் சாட்சியுமான *பாதிக்கப்பட்டவர் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் அன்றைய தேதியில் கோவை மாநகரத்தில் இல்லை என்றும் அவர் அன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார் என்பதையும்* அதிகாரப்பூர்வமான தகவலை பெற்று குற்ற அறிக்கையை தள்ளுபடி செய்து புதிய விசாரணை உத்தரவிட வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் மேல் மேல்முறையீடு செய்யப்பட்டதில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த *குற்ற அறிக்கை தள்ளுபடி செய்ததோடு அல்லாமல் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது*

You may also like...