கிஷோர் கே சாமி எதிராக பிறப்பிக்கபட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க சென்னை காவல் ஆணையர்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிஷோர் கே சாமி எதிராக பிறப்பிக்கபட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க சென்னை காவல் ஆணையர்க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக கிஷோர் கே சாமி மீது திமுகவின் ஐடி விங் நிர்வாகி அளித்த புகாரில் சென்னை பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து செய்யபட்டது.

வழக்கில் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிஷோர் கே சாமி சமூக வலைத்தளங்களில் பல குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாகவும் அவருக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிஷோர் கே சாமி மீது பலர் புகார் அளித்த நிலையில் அவருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஜூன் 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும் இதனை ரத்து செய்யக் கோரியும் கிஷோர் கே சாமி தந்தை கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க காவல் ஆணையர்க்கு அதிகாரம் இல்லை எனவும் மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு மற்றும் ஆவணங்களில் மொழியாக்கம் செய்ததில் பிழை இருப்பதாகவும் இதை முழுமையாக இல்லாமல் பிறப்பித்த குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பெங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

You may also like...