கழக சட்டத்துறையின் தலைமை கழக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்! *இப்படிக்கு* , _செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயபிரகாஷ்* , _தமிழ்நாடு_ _அரசு_ _வழக்கறிஞர்_ , _சென்னை_ , _உயர்_ _நீதிமன்றம்_

[1/30, 10:49] jp dmk: http://ook.com/story.php?story_fbid=pfbid0wj4m7emGt35wNofqzh1VndYdMCZyEQ7MEWNB39GGf9ghaaGemXuyVQUeQASpJu3il&id=100004188364623&mibe
[1/30, 10:50] jp dmk: *திராவிட* *இனத்தின்*
*வழிகாட்டி*
*கழகத்* *தலைவர்*
*வெளியிட்ட*
*திமுக* *சட்டத்துறையின்_*
*2023* *ஆண்டு*
*திராவிட* *நாட்காட்டி* –
_ஓர்_ _ஆய்வு_ _பார்வை_ . ———————-
திமுகழக சட்டத்துறையின்
செயலாளர்
மூத்த வழக்கறிஞர்
_மானமிகு_
*என்.ஆர்.இளங்கோ* எம்.பி அவர்கள் _தலைமையில்_
_தமிழ்நாட்டின்_ *முதலமைச்சர்*
” திராவிட மாடல் ”
அரசின் காவலர்,
*நம்* *கழகத்* *தலைவர்* ,
*தளபதி* அவர்களின் பொற்கரங்களால்
அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்பட்ட
*2023* ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியினை கழகச் செயலாளரிடமிருந்து இனிதே பெற்றுக் கொண்டேன்.
ஈராயிரம் ஆண்டு ஆரிய அடிமைத்தனத்தை  ஓர் நூற்றாண்டில்  வீழ்த்திய
திராவிட இயக்க வரலாற்று தலைவர்களின் புகைப்படங்களும் _பகுத்தறிவு_ _பகலவன்_
*தந்தை* *பெரியார்* ,
*பேரறிஞர்* *அண்ணா* ,
*தமிழினத்* *தலைவர்*
*கலைஞர்*
மற்றும்
*இனமான* *பேராசிரியர்* ஆகியோரின் சிந்தனை குவியல்கள்
ஒருபுறமும்
மாண்புமிகு முதல்வரின்
கொள்கை கோட்பாடுகளை
குறித்த புரட்சிக் கருத்துக்கள் மறுபுறமும் என திட்டமிட்டு தீட்டப்பட்ட திராவிட நாட்காட்டியில் *12* மாதங்களுக்கான தனித்தனி தாள்களும் கருத்து குவியலாய் தொகுக்கப்பட்டு
கண் கவரும்
கழகத் தலைவர் தளபதி மற்றும் இளைஞர் அணியின் செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி அவர்களின் புகைப்படங்கள் தாங்கிய அழகிய அட்டை படங்களும் திராவிட இயக்க அடிப்படைத் தத்துவங்கள்  பொதிந்த திராவிட வரலாற்று நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு
பிப்ரவரி மாதம்
*18* ஆம் நாளில் மறைந்த
டாக்டர் . நடேசனார் நினைவு தினத்தை முன்னிட்டு அம்மாத பக்கத்தில் அவருடைய புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அதேபோல் ஏப்ரல் மாதம் *27ஆம்* நாளில் பிறந்து ஏப்ரல் *29ஆம்* தேதியில் மறைந்த சர்.பி.டி. தியாகராயரின் நினைவை போற்றி ஏப்ரல் மாத பக்கத்தில் அவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறாக திராவிட இயக்க வரலாற்று தலைவர்களான
தமிழ்வேள்
பி.டி.பழனிவேல் ,
திராவிட தளபதி
ஏ.டி . பன்னீர்செல்வம்,
வகுப்புரிமைச் சிற்பி
முத்தையா முதலியார் ,
திராவிட லெனின் டி.எம்.நாயர், பனகல் அரசர் உள்ளிட்ட இனப் போர் வீரர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு மாதத்திலும்  அவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பிறந்த தினம், நினைவு தினம் என்று வருடத்தின் மிக முக்கிய நாட்களை அடையாளக் குறியீட்டு  நாட்காட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி, பஞ்சமி, கீழ் நோக்கு நாள், மேல்நோக்கு நாள் , சஷ்டி, ஏகாதேசி, பிரதோஷம், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், ராசி மற்றும் பல்லி விழும் பலன்கள் என்று நம்மை மூடநம்பிக்கை எனும் இருளில் தள்ளும் வாடிக்கையான நாட்காட்டிகளை போல் அல்லாமல் நாம் மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கு வழி வகுத்த மாபெரும்
சமூக நீதி காவலர்களின்
கொள்கை முழக்கங்களோடு வந்துள்ள
கழக சட்டத்துறையின்
நாட்காட்டி நம்மிடையே _பகுத்தறிவூட்டவும்_
கொள்கை _உணர்வூட்டவும்_
திராவிட தலைவர்களின் _நினைவூட்டவும்_
நம் கழகத் தலைவரின் தலைமையில்
_செயலாற்றவும்_
நமக்கு
_நல்வழிகாட்டவும்_
செய்யும்
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நம் இல்லத்திலும் அலுவலகத்திலும் சுவற்றில் அலங்கரித்து தொங்க மட்டுமல்ல
இந்த நாட்காட்டி
நம் இதயத்திலும்
எண்ணத்திலும் இயக்கத்தின் கொள்கைகளை
ரத்த நாளத்திலும்
கொண்டு செல்லும் ஓர் கொள்கை ஏடாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தை முதல் நாள் தான்
தமிழருக்கு புத்தாண்டு என்ற தலைவர் _கலைஞரின்_
வழியில் தை மாதத்தில்
நம் கழகத் தலைவரின் பொற்கரங்களால்
இந்த நாட்காட்டி வெளியிடப்பட்டது.
சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பதாகவும் இது கழக சட்டத்துறைக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவும் கருதுகிறேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள கழக வழக்கறிஞர்களின் இல்லம் மற்றும் அலுவலங்களில்
இந்த நாட்காட்டி அலங்கரித்து அறிவூட்டும்
கழக கருத்து களஞ்சியமாக செறிவூட்டவும் திகழ இத்தருணத்தில் வாழ்த்துகின்றேன்! இந்த சீரிய பணியை திறம்பட செய்துள்ள கழக சட்டத்துறையின் செயலாளர் அண்ணன் _மூத்த_ _வழக்கறிஞர்_ *என்.ஆர்.இளங்கோ* எம்.பி. உள்ளிட்ட கழக சட்டத்துறையின் தலைமை கழக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்!
🙏🙏🙏
*இப்படிக்கு* ,
_செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயபிரகாஷ்* , _தமிழ்நாடு_ _அரசு_
_வழக்கறிஞர்_ ,
_சென்னை_ , _உயர்_ _நீதிமன்றம்_ .
💐💐💐

You may also like...