கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்பட வில்லை நீதிமன்றங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படியே செயல்படுகிறது நீதிபதிகள் கருத்து. உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு கடந்த ஒன்றரை மாதத்தில் நான்காயத்திற்கு மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளது- நீதிபதிகள்.

காவலருக்கு வழங்கப்பட்ட பனி இட மாறுதலை கர்மா அடிப்படையில்
இரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை இரு நீதிபதிகள் தடை விதித்தனர் இதை எதிர்த்து காவலர் தரப்பில் மேல் முறையீடு.
செய்யபட்டது.

கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்பட வில்லை நீதிமன்றங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படியே செயல்படுகிறது நீதிபதிகள் கருத்து.

உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு கடந்த ஒன்றரை மாதத்தில் நான்காயத்திற்கு மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளது- நீதிபதிகள்.

 

மதுரை, அவனியாபுரம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றியவர் ஸ்ரீமுருகன். இவர் நிர்வாகக் காரணங்களுக்காக தூத்துக்குடிக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் மனு ெசய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, கர்மாவின் கொள்கைப்படி மனுதாரருக்கு நிவாரணம் தர நீதிமன்றம் விரும்புவதாக கூறி, தூத்துக்குடி மாவட்ட பனி மாற்ற செய்த்தை இரத்து செய்து
மதுரை மாவட்டத்திற்கு போக்குவரத்து காவலராக மாற்றம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தென்மண்டல ஐஜி தரப்பில் ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அமர்வு தனி நீதிபதி உத்தரவுக்கு ஏற்கனவே தடை விதித்தது.

ஸ்ரீமுருகன் தரப்பிலும் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. அதில், ‘‘பணி இடமாற்றம் தொடர்பான வழக்கில், குறிப்பிட்ட இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது. எனவே, என்னை மதுரையில் போக்குவரத்து காவலராக நியமிக்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து ெசய்ய வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், ஏற்கனவே நிலுவையில் உள்ள அப்பீல் மனுவுடன் சேர்த்து பட்டியலிடுமாறு கூறி விசாரணையை அக். 27க்கு தள்ளி வைத்தனர்.

இன்று இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி
பணியிட மாறுதல் கொடுக்கப்பட்ட காவலர் மீது 16 குற்ற ச்சாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின் படிய காவலருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எனக்கு தண்டனைக்கு மேல் தண்டனை விதித்து எனக்கு வழங்கப்படும் சம்பளம் மிகவும் குறைவாக கொடுக்கப்படுகிறது படிக்க வேண்டும் எனவே இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள் கடந்த ஒன்றரை மாதத்தில் இந்த அமர்வு நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளது
கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் இயங்கவில்லை அரசியல் அமைப்புச் சட்டம் படியே நீதிமன்றம் இயங்குகிறது
கர்மாவுக்கு என்று ஏதேனும் விதி உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு ஒத்திவைதனர்.

___

அரசின் உரிய நெறிமுறைகளை பின்பற்றப்படாமல் விற்கப்படும் வீட்டடி மனை இடங்களில் அரசின் செலவில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதா அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

அரசின் உத்தரவிற்க்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கூடது – நீதிபதிகள் கேள்வி.

சென்னையை சேர்ந்த அருன் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த பொதுநல வழக்கு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேதாஜி நகர் என மனைப்பிரிவு செய்து குடியிருப்பு மனைகளுக்கான இடங்கள் விற்பனை செய்யப்பட்ட வருகிறது இந்த வீட்டு மனைகள் தமிழ்நாடு சட்டவிதிகளின் கீழ் வரன்முறைப்படுத்த பட வில்லை.

இவ்வாறு வரன்முறைப்டுத்தப்படாத மனைப் பிரிவில் அரசின் செலவில்
சாலைகள் உட்பட மேம்பாட்டு வசதிகள் செய்து தரக்கூடாது என அரசின் உத்தரவு உள்ளது.

ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள். ஊராட்சி மன்ற தலைவர் இனைந்து அரசு செலவில் தனிப்பட்ட நபரின் சொத்துக்களை மேம்படுத்தும் விதமாக சாலை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

எனவே அரசின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டு அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் தமிழ்நாடு முழுவதும் இது
போன்று அனுமதி இன்றி
வரன்முறைப்படுத்தப் படாத மனைகளில் அரசாணை 78/2017) உத்தரவுக்கு எதிராக எந்த மேம்பாட்டு வசதியும் செய்யக்கூடாது என்றும் அரசின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் பாரதி

நிலங்களை வகைப்படுத்தி வீட்டடி மனை களாக விற்பனை செய்வதற்கான பல்வேறு அரசாணைகள் உத்தரவுகள் அரசு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதில் 2017 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அரசின் உரிய விதிமுறைகளை பின்பற்றி வரன்முறை செய்யப்படாத வீட்டு மனைகள் இடங்களுக்கு எந்த மேம்பாட்டு வசதியும் செய்து கொடுக்கக் கூடாது என உத்தரவு உள்ளது ஆனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதற்கு எதிராக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் அரசின் உரிய விதிகளை பின்பற்றாமல் உள்ள வீட்டடி மனை பிரிவுகளுக்கு தனிப்பட்ட நபர்களுக்காக சாலைகள் அமைக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அவ்வாறு சாலைகள் அமைக்க பட்டிருந்தால் அதற்கான முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
என உத்தரவிட்ட நீதிபதிகள் அரசின் விதிகளை மதிக்காமல் செயல்பட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனு குறித்து மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் உறப்பனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

___

*கோவில் பிரகாரத்தினுள் வணிக நோக்கத்தில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்க முடியாது – நீதிபதிகள் கருத்து*

தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி பகுதியில் ஸ்ரீ அருள்மிகு சங்கரராமேஸ்வரர் ஆலயம் மற்றும் அருள்மிகு வைகுண்டபதி திருக்கோவின் நுழைவாயில் அமைந்திருக்கும் கடைகளை அகற்ற கோரிய வழக்கு…

*பூக்கடைகளை கோவிலின் வெளியே அமைப்பது குறித்து சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் தகவல் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.*

தூத்துக்குடி சேர்ந்த வசந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி பகுதியில் ஸ்ரீ அருள்மிகு சங்கரராமேஸ்வரர் ஆலயம் மற்றும் அருள்மிகு வைகுண்டபதி திருக்கோவில் ஆகிய பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயங்கள் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதனமிக்க ஆலயமாக உள்ளது.

இந்தக் கோவில்களில் பழங்காலத்தில் இருந்தே பூ விற்கவோ அல்லது பிரசாதம் விற்கவோ எந்தக் கடையும் இல்லை.

ஆனால், தற்போது பூக்கடைகள் மற்றும் பிரசாத விற்பனைக் கடைகள் நடத்துவதற்கு கோவிலின் செயல் அலுவலர் டெண்டர் நடத்தி கோயில் வளாகத்தினுள் கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இது முற்றிலும் கோவிலின் பழமையான பழக்கவழக்கங்களுக்கு எதிரானது.

அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலைப் பொறுத்தவரை நுழைவாயிலின் மொத்த அகலம் 20 அடி மட்டுமே இந்த நிலையில் கோவிலின் வளாகத்திற்குள் கடைகள் செயல்படுவதால் பக்தர்கள் கோவிலின் உள்ளே சென்றுவர மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு பழமை வாய்ந்த சிற்பங்கள் இதனால் மறைக்கப்படுகிறது.

இது மட்டுமன்றி கோயிலின் நுழைவாயிலின் சில பகுதியைக் கூட அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

கோவில் வளாகத்தினுள் கடைகள் அமைந்துள்ளதால் திருவிழாக் காலங்களில் சாமி ஊர்வலங்கள் நடத்தப்படுவதில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

எனவே, தூத்துக்குடி மாப்பிள்ளை ஊரணி பகுதியில் ஸ்ரீ அருள்மிகு சங்கரராமேஸ்வரர் ஆலயம் மற்றும் அருள்மிகு வைகுண்டபதி திருக்கோவின் நுழைவாயில் அமைந்திருக்கும் கடைகளை அகற்ற செய்ய உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கோவில் பிரகாரத்தினுள் வணிக நோக்கத்தில் கடைகள் அமைத்து செயல்பட அனுமதிக்க முடியாது என கருத்து தெரிவித்து பூக்கடைகளை கோவிலின் வெளியே அமைப்பது குறித்து சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.

___

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.பி.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் ஏற்கனவே அரசின் வீட்டு மனை வழங்கப்பட்ட பகுதியிலுள்ள காலி இடத்தில் வீட்டு மனை கேட்டு பலர் மனு செய்திருந்தனர். ஆனால், எங்களுக்கு தராமல் எஸ்.பெருமாள்பட்டி மற்றும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 10 பேருக்கு வழங்கியுள்ளனர். இதேபோல், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினருக்கும் விதிகளை மீறி வழங்கியுள்ளனர். எனவே, இதை ரத்து செய்து தகுதியானவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.

 

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஒதுக்கீடு பெற்றவர்களில் 34 பேர் விதிகளை பின்பற்றாமல், கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ள வில்லை. எனவே, அவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

 

இதை பதிவு செய்து ெகாண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

___

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கு விதிகளை மீறி அரசு அதிகாரிகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளனர் இதை ரத்து செய்து தகுதியானவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குமாறு உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு

அரசு ஒதுக்கீடு பெற்றவர்களில் 34 பேர் விதிகளை பின்பற்றாமல், கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளாமல் வைத்துள்ளதால் அவர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல்

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.பி.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தில் ஏற்கனவே அரசின் வீட்டு மனை வழங்கப்பட்ட பகுதியிலுள்ள காலி இடத்தில் வீட்டு மனை கேட்டு பலர் மனு செய்திருந்தனர். ஆனால், எங்களுக்கு தராமல் எஸ்.பெருமாள்பட்டி மற்றும் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 10 பேருக்கு வழங்கியுள்ளனர். இதேபோல், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினருக்கும் விதிகளை மீறி வழங்கியுள்ளனர். எனவே, இதை ரத்து செய்து தகுதியானவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில் ஒதுக்கீடு பெற்றவர்களில் 34 பேர் விதிகளை பின்பற்றாமல், கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ள வில்லை. எனவே, அவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவை முடித்து வைத்தனர்.

__

கடந்த 2020-ம் ஆண்டில் மதுரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 55) வீட்டின் அருகில் வசித்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை 5 ஆயிரம ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

மதுரையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). இவரது வீட்டின் அருகில் வசித்த 7 வயது சிறுமிக்கு கடந்த 2020-ம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மதுரை டவுன் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கும்படியும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

You may also like...