கடல் தமிழ்க் கண்ணீர். புயலு முடிஞ்சுருச்சே ! பூத்த வெள்ளி தெருஞ்சிருச்சே !

கடல் தமிழ்க் கண்ணீர்.

புயலு முடிஞ்சுருச்சே !
பூத்த
வெள்ளி
தெருஞ்சிருச்சே !

கடலுக்கு
போன
தொர
கர
வந்து
சேரலியே!

கண்டு ரெண்டும்
சேரலியே !

கடலு ஓஞ்சுருச்சே!
காத்து
மொத்தம்
தூங்கிருச்சே !

தொழிலுக்குப்
போன
தொர
தோணி
வந்து
சேரலியே !

துக்கமின்னும்
ஆறலியே !

கடலுக்கே
பலியாக
நாங்க
கரையராய்ப்
பிறந்தோமா !

படகில் போய் பலியாக நாங்க
பரதவராய்
பிறந்தோமா!

மீனுக்கு இரையாக
நாங்க
மீனவராய்ப்
பிறந்தோமா !

மூழ்கித்தான் சாவதற்கே
நாங்க
முக்குவராய்ப் பிறந்தோமா !

குமரியிலே ஒரு காலம்
கோடி
சனம்
செத்தோமே !

பூம்புகாரில் ஒரு காலம் பொத
பொதையா
செத்தோமே !

அப்பப்போ அப்பப்போ
அலை
விழுங்க
செத்தோமே !

துப்பாக்கிக்
குறி
பார்க்கத்
துடி
துடித்து ச்
செத்தோமே !

சாவுக்கும் நடுநடுவே
சாதிக்க
வந்தவர்கள் !

நாங்கள்
சேர சோழ பாண்டியர்க்கும்
சிறந்த
வெற்றியை
தந்தவர்கள் !

சிங்கார
வேலரைத்தான்
சிந்திக்க
விட்டவர்கள் !

வல்வெட்டித்
துறையனால் வரலாற்றைத் தொட்டவர்கள்!

இன்று
குமரிக் கடல் நெடுக்க
குமுறி
அழுகின்றோம்!

ஒதுங்கும்
உடல்
தேடி
உருகி
அழுகின்றோம் !

இடைத்தேர்தல் சத்தத்தில்
எம்
அழுகை
கேட்காதோ !

கவிஞர் அறிவுமதி.

You may also like...