ஐகோர்ட் judges s vaithiyanathan and jegathes chandra உத்தரவு எதிரொலி போலி வக்கீல் கைது

 

ஐகோர்ட் உத்தரவு எதிரொலி போலி வக்கீல் கைது. நீதிபதிகள் s vaithiyanathan jegathes Chandra order

 

*பத்திரிகைச் செய்தி*

சென்னை உயர்நீதிமன்றத்தில் போலி ஆவணம் சமர்பித்து தலைமறைவாகயிருந்த போலி வழக்கறிஞர் கைது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சாந்தி என்பவர் தான் தத்தெடுத்த மகனை ஒப்படைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் சொத்துக்காக ரம்யா என்பவரும், அண்ணா நகரை சேர்ந்த வக்கீல் பாபு என்பவரும், தன் மகனை கடத்தி சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார். மேற்படி ஆட்கொணர்வு மனு எண் 728/2022 ல் கடந்த 28.07.2022 ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

எதிர்மனுதாரரான திரு.S.பாபு என்பவர் தான் ஒரு வழக்கறிஞர் எனவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டவியல் பட்டம் பெற்றதாக ஒரு போலி சான்றிதழை சமர்பித்துள்ளார். மேற்படி சான்றிதழை போலி என்று உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் போலி வழக்கறிஞர் திரு.பாபு மீது குற்ற வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேற்படி சாந்தி என்பவர் அளித்த புகாரைப் பெற்று மேற்படி போலி வழக்கறிஞர் மீது மத்திய குற்றப்பிரிவு, மோசடி ஆவணங்கள் புலனாய்வு பிரிவில் (Forgery Investigation Wing/CCB) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அறிந்து தலைமறைவான போலி வழக்கறிஞர் மீது வேறு ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா எனவும், மேலும் பொதுமக்கள் இவரை நம்பி ஏமாந்துள்ளார்களா என்பது குறித்தும், வேறு வழக்குகளில் வேறு யாராவது நபருக்காக மேற்படி போலி வழக்கறிஞர் ஆஜராகியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தலைமறைவான முக்கிய எதிரியான போலி வழக்கறிஞர் பாபு (எ) பாபு சஞ்சீவி என்பவர் தஞ்சாவூரில் தலைமறைவாக பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி பெற்று உயர் அதிகாரிகளின் உத்திரவின் படி காவல் உதவி ஆணையாளர் திரு. C.K.சச்சிதானந்தம் தலைமையில் தனிப்படையானது 15.08.2022 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் மாணாங்கோரை என்ற இடத்தில் வைத்து போலி வழக்கறிஞர் பாபு (எ) பாபு சஞ்சீவி, வ/55, த/பெ.செல்வராஜ், எண் 59, ஆர்-7, காந்தி நகர், அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை-40 என்பவரை கைது செய்தனர்.

You may also like...