உரிய சிகிச்சைக்கு பிறகே ரிவால்டோ யானை காட்டில் விடப்பட்டதாக தமிழக govt pleader Muthukamar தெரிவித்தார். Case dismissed cj bencj

உரிய சிகிச்சைக்கு பிறகே ரிவால்டோ யானை காட்டில் விடப்பட்டதாக தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது.

தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானைக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வாழைத்தோட்டம் பகுதியில் சிகிச்சை அளித்த வனத்துறையினர், பின்னர் காட்டில் விட்டனர். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.

அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஆஜராகி சிகிச்சை இல்லாமல் ரிவால்டோ யானை காட்டில் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தரப்பில் ரிவால்டோவை 5 மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் காட்டிற்குள் விடப்பட்டுள்ளதாகவும், ரிவால்டோ யானை காட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறி அதற்கான ஆவணம் தாக்கல் செயப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், ரிவால்டோவை மீண்டும் திருச்சி முகாமில் அடைக்கக் கோரிய வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

You may also like...