உயர்நீதிமன்றம், மேற்படி அறிக்கையை பரிசீலித்து, கடந்த 16/10/2020ம் தேதியன்று, இறுதி அறிக்கையை உடன் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை 27/11/2020ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

1957ல் விற்ற சொத்தை மீண்டும் 2002ம் வருடத்தில் பொது அதிகார முகவர் மூலம் மீண்டும் மோசடியாக விற்பனை- உயர்நீதிமன்ற உத்தரவால் விசாரணையில் மோசடி அம்பலம்
திருமதி.வனிதா என்பவருக்கு போரூர் கிராமத்தில் சர்வே எண் 188/1ஏ ல் சொத்துக்கள் அவரது மாமனார் வழியில் பாத்தியப்பட்டு அவர் அனுபவத்தில் இருந்து வருகிறது. அந்தச் சொத்தை அபகரிக்கும் விதமாக கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராஜாமணி அம்மாள், அவரது மகள் ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவர் சுரேஷ்குமார் ஆகியோர் 2002ம் வருடத்தில் ஜியாவுதீன் என்பவருக்கு வனிதாவின் சொத்துக்களைப் பொறுத்து பொது அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்து, அதன் தொடர்ச்சியாக 2009ம் வருடத்தில் ஒரு கிரையப் பத்திரமும் ஏற்படுத்தியுள்ளார்கள்.
திருமதி.வனிதா அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர குற்றப்பிரிவு-II (Land Grabbing Cell) குற்ற எண் 193/2019 என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே மோசடி ஆவணங்களை வைத்து, பத்திரங்கள் பதிவு செய்தது பொறுத்தும், மோசடியாக நில ஆர்ஜித அலுவலரிடம் தொகை பெற்றது குறித்தும் திருமதி.வனிதா தாக்கல் செய்திருந்த வழக்கில், நீதியரசர் திரு.பாரதிதாசன் அவர்கள் Cont.P.1307 & 1308/2019ல் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விசாரணையை துரிதப் படுத்தியதில், குற்ற எண் 193/2019ன் புலன் விசாரணை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் Status Report தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையின்படி, ராஜாமணி அம்மாளின் கணவரும், ஸ்ரீதேவியின் தகப்பனாருமான கிருஷ்ணமூர்த்தி அவரது தாயாருக்கு 11/09/1942ம் தேதிய வருட சீதன பத்திரம் மூலம் கிடைத்த சொத்தான சர்வே எண் 188/25ல் உள்ள சொத்தான 18செண்ட் நிலத்தை கடந்த 01/06/1957ம் தேதியன்றே லோகாம்பாள் என்பவருக்கு ஒரு பதிவு செய்யப்பட்ட பத்திரம் (ஆவண எண் 1424/1957, சார்பதிவாளர் இணை-II, சைதாப்பேட்டை) மூலம் கிரையம் செய்து விட்டார். மேற்படி கிருஷ்ணமூர்த்தி கடந்த 1967ம் வருடத்திலேயே இறந்து விட்டார் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது.
இந்நிலையில், மேற்படி ராஜாமணி அம்மாள், ஸ்ரீதேவி மற்றும் அவரது கணவர் சுரேஷ்குமார் ஆகியோர், சொத்துக்கள் விற்கப்பட்டது தெரிந்தும், கடநத 1979ம் வருடத்தில் ராஜாமணி அம்மாள் பெயரிலும், இறந்து போன கிருஷ்ணமூர்த்தி பெயரிலும் சர்வே எண் 188/25 ல் தலா 9 செண்ட் விஸ்தீரணமுள்ள நிலத்திற்கு தனித் தனியே அரசாங்கம் அனுபந்த பட்டா எண் S.R.30/74 R.F. XIV B.9. MDU கொடுத்ததாக அரசு ஆவணங்களை போலியாக புனைந்துள்ளது விசாரணையில் தெரிய வருகிறது. தாசில்தாரிடம் விசாரணை செய்த வகையில் அவ்வாறான பட்டா 1979ம் வருடத்தில் கொடுக்கப்படவில்லை என்றும், எதிரிகள் பயன்படுத்தி வரும் பட்டா வருவாய்த்துறையால் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. 1967ம் வருடத்திலேயே இறந்து விட்ட கிருஷ்ணமூர்த்தி பெயரில் 1979ம் வருடம் அசைன்மெண்ட் பட்டா கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும், அவ்வாறான பட்டா வருவாய்த்துறை அதிகாரிகளால் கொடுக்கப்படவில்லை என கூறியுள்ளதாலும், ராஜாமணி அம்மாள், ஸ்ரீதேவி மற்றும் சுரேஷ்குமார் புகார்தாரரின் சொத்துக்களை அபகரிக்க எண்ணி, போலி அரசாங்க முத்திரைகளையும், போலியாக அனுபந்த பட்டா தயார் செய்து குற்றம் புரிந்துள்ளார்கள்.
மேலும் தாசில்தார் அவர்களை விசாரணை செய்ததில், சர்வே எண் 188/1ஏ ல் உள்ள சொத்துக்கள் மௌண்ட் பூந்தமல்லி ரோட்டிற்கு வடபுறமும், சர்வே எண் 188/25 ல் உள்ள சொத்துக்கள் மௌண்ட் பூந்தமல்லி ரோட்டிற்கு தென்புறமும் உள்ளதாக தெரிய வருகிறது. ஆனால், ராஜாமணி அம்மாள், ஸ்ரீதேவி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் 11/09/1942 ம் தேதிய சீதனப் பத்திர ஆவணம் மூலம் கிடைத்த சொத்துக்கள் மௌண்ட் பூந்தமல்லி ரோட்டின் வடபுறம் உள்ள போல் நான்கெல்லை கண்டு, 1979ல் பட்டா வழங்கப்பட்டதாக போலி பட்டா ஆவணங்களை உருவாக்கியும், 11/09/1942ல் கிடைத்த சொத்துக்கள் ஏற்கனவே 1957ல் விற்கப்பட்டதை மறைத்தும், கடந்த 2002ம் வருடம் எதிரி ஜியாவுதீனுக்கு ஒரு பதிவு செய்யப்பட்ட பொது அதிகாரப் பத்திரம், சௌகார்பேட்டை சார்பதிவாளர் ஆவண எண் 218/2002 எழுதிக் கொடுத்துள்ளார்கள். மேற்படி பொது அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்ததன் மூலம் ராஜாமணி அம்மாள், ஸ்ரீதேவி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்கள் நேரடியாக குற்ற செய்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.
மேற்படி பொது அதிகாரப் பத்திரத்தை தொடர்ந்து, ராஜாமணி அம்மாள், ஸ்ரீதேவி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்கள் தங்களது பொது அதிகார முகவர் மூலம் 14/12/2009ம் தேதியன்று சர்வே எண் 188/1ஏ மற்றும் 188/25 ஆகிய இரண்டு சொத்துக்களும் ஒரே சொத்து என்று வாசகம் கண்டு எதிரி செண்பகராமனுக்கு ஒரு கிரையப் பத்திரம் (ஆவண எண் 3964/2010, சார்பதிவாளர், குன்றத்துர்) எழுதிக் கொடுத்துள்ளார்கள்.
சர்வே எண் 188/25ன் தற்போதைய உரிமையாளர்களும் விசாரிக்கப்பட்டு, அவர்கள் சொத்துக்கள் 1957ம் வருடத்திலேயே கிரையம் பெறப்பட்டு விட்டதாகவும் கூறி, அதன் தொடர்ச்சியாக அவர்கள் பதிவு செய்த ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்கள். மேற்படி ஆவணங்களிலிருந்து சர்வே எண் 188/25ல் உள்ள நிலங்கள் மௌண்ட் பூந்தமல்லி ரோட்டிற்கு தென்புறம் உள்ளது என்பதும், அது 1957ம் வருடத்திலேயே 1ம் எதிரியின் கணவர் கிருஷ்ணமூர்த்தியால் விற்கப்பட்டது தெரியவருகிறது. ஆக ராஜாமணி அம்மாள், ஸ்ரீதேவி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்கள் திட்டமிட்டே, இல்லாத உரிமையை ஏதோ பட்டா மூலம் கிடைத்ததாக கூறி போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளார்கள்.
மேலும், ராஜாமணி அம்மாள், ஸ்ரீதேவி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்கள் சொல்லும் பட்டா 1979ம் வருடம் கிருஷ்ணமூர்த்தி பெயரில் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், கிருஷ்ணமூர்த்தி 1967ம் வருடத்திலேயே இறந்துவிட்ட நிலையிலும், வருவாய்த் துறை அதிகாரிகளே பட்டா தங்களால் அளிக்கப்பட்டதல்ல என்று கூறும் நிலையிலும், அரசு ஆவணங்கள் மோசடியாக புனையப்பட்டது தெளிவாக புலனாகிறது. மேலும் 30/12/1979ம் தேதியன்று ராஜாமணி அம்மாளும், கிருஷ்ணமூர்த்தியும் சர்வே எண் 188/25ல் அனுபவத்தில் இருப்பதாக சைதாப்பேட்டை வட்டாட்சியர் ந.க.எண் அ1/937/79/பி2ன் படி அளித்தது போல் ஒரு நில உரிமைச் சான்றை போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி உருவாக்கியுள்ளார்கள்.
அதே போல், ராஜாமணி அம்மாள், ஸ்ரீதேவி மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர்கள் இதே போன்ற வேறு குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வருகிறது.
மாண்பமை உயர்நீதிமன்றம், மேற்படி அறிக்கையை பரிசீலித்து, கடந்த 16/10/2020ம் தேதியன்று, இறுதி அறிக்கையை உடன் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை 27/11/2020ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

You may also like...