உடைந்த கண்ணாடி அய்யா ஒட்டவே முடியாது என்ற சொன்ன பெண்ணை அவரது கணவரோடு சேர்த்து வைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு எம்.எம்.சுந்தரேசு அவர்கள்- மேற்படி நீதிபதி முன்பு ஆட்கொணர்வு மனு கடந்த ஆகஸ்ட் 2020 இல் தாக்கல் செய்தோம்- மேற்படி அப்பெண்ணை

உடைந்த கண்ணாடி அய்யா ஒட்டவே முடியாது என்ற சொன்ன பெண்ணை அவரது கணவரோடு சேர்த்து வைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு எம்.எம்.சுந்தரேசு அவர்கள்-

மேற்படி நீதிபதி முன்பு ஆட்கொணர்வு மனு கடந்த ஆகஸ்ட் 2020 இல் தாக்கல் செய்தோம்- மேற்படி அப்பெண்ணை ( through Writ of Habeas Corpus Petition) வழியே சேர்த்து வைத்தார் மாண்பமை நீதிபதி எம்.எம்.சுந்தரேசு அவர்கள்
– காதல் மணம் புரிந்தோர் இரண்டறக் கலந்தார்கள்- மூன்று மாத கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு சேர்த்து வைத்தார் .
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த நிகழ்வு.

இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிய ஓர் அரசு ஊழியரின் மனைவி சிற்சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவரை விட்டு ஒரு குழந்தையோடு வெளியேறிவிட்டார். இதன் காரணமாக அவரது கணவரின் சார்பில் சென்னை உயர் ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தோம், மனுவை விசாரித்த நீதிமன்றம் மேற்படி அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு கூறியது. ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் காணொலி வாயிலாக நடைபெற்றது. மேலும் அந்த பெண்ணை தேடிப்பிடிக்க காவல் துறையினர் முதற்சிக்காமல் மெத்தனமாக இருந்துவந்தார்கள், மேலும் மனுதாரரை விசாரணை என்ற பெயரில் பாடாய் படுத்தி இருக்கிறார்கள், இதை அறிந்து செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கம் போலவே காவல்துறையினர் நடவடிக்கைகள் குறித்தும் அவரது தொந்தரவுகள் குறித்தும் நீதிமன்றத்தில் நமது மொழியில் பேசினேன்.
( family institution has to be protected my lord, if the said institution is broken , the entire society will be broked, affected. Therefore this is high time this court look into the matter and to take steps for the reunion of the couple and necessary directions should be given to the police to secure the detenue .Moreover the police threatened the affected petitioner that why he approached the high court for trace out his wife through Habeas Corpus Petition instead of trace out the whereabouts of the detenue.)
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தரேசு அவர்கள் மற்றும் அவருடன் காவல்துறையினரை கடிந்து கொண்டதோடு , அப்பெண்ணை ஒரே வாரத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார்.

அதன்படி
அக்டோபர் மாதம், 2020, இரண்டாம் வாரம் ஆஜராகிய அப்பெண் அவரது கணவரோடு செல்ல மறுத்து ஒற்றைக்காலில் நின்றார், தனியாக வாழ்வேன் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசு மற்று டி.கிருட்டிண குமார் முன்பு சவால் விட்டார், ஆனால் மாண்பமை நீதிபதி எம்.எம்.சுந்தரேசு அவர்கள் அப்பெண்ணை அழைத்து பக்குவமாக அவரது 8 மற்றும் 4 வயதுடைய குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் அப்பெண்ணின் வயதும் , இளம் வயது அவரது கணவரும் இளம் வயது, இருவரும் காதல் – ஜாதி கடந்து மணம் ( கணவர்-படையாட்சி- மனைவி- இசை வேளாளர்) புரிந்தவர்கள் இவர்கள் பிரிவதால் எத்துணை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை பற்றி எல்லாம் எடுத்து சொல்லி யாரும் எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மாண்பமை நீதிபதி எம்.எம்.சுந்தரேசு அவர்கள் இருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இறுதியில் ஒருவழியாக அப்பெண் கணவருடன் செல்வதற்காக சொன்னார.

ஒரு வார காலத்திற்கு பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது முன்பு தனித்தனியாக வந்தவர்கள் பிறகு இறுதி விசாரணை அன்று இன்முகத்தோடு இணைந்தே வந்தார்கள். நீதிபதிகள் கேட்டார்கள் என்ன ஆச்சுமா ?
அப்பெண்: அய்யா சேர்ந்து வாழுறோம் அய்யா.
நீதிபதி எம்.எம்.சுந்தரேசு : Congratulations. Disposed the matter.
மனிதர் வாழும் காலம் மிகவும் குறைவு
அன்பை உணர்வதும் அன்பை வெளிப்படுத்துவதுமே வாழ்க்கை- கோபத்தால் எதை சாதிக்க போகிறோம் சில இழப்புகளையும், வெறுப்புகளையும் தவிர.
இரு உள்ளங்களை இணைத்து வைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
தாயுள்ளத்தோடு இந்த வழக்கை அணுகிய மாண்பமை நீதிபதி எம்.எம்.சுந்தரேசு அவர்கள் உச்ச நீதிமன்றம் செல்லும் இந்த சூழலில் அவரக்கு நன்றி பாராடுகிறோம்.

Greetings to you lordship
By Durai Arun.

You may also like...