அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அதனை கைவிடக்கோரியும் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் 2020ம் ஆண்டு கரூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதனை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்றைய தினம் ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை எதுவும் மீறவில்லை என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

You may also like...