அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்திருக்கிறேன்.*

[3/22, 11:48] Sekarreporter: *அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஓரிரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்திருக்கிறேன்.*

*75 நாட்களும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆறுமுக சாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம்*

சசிகலா மூலமாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் அறிமுகம் ஏற்பட்டது.

போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் தங்கி இருந்தாலும், என்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு, குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவர் உடல் நல குறைவாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

2016 தேர்தலின் போதும் உடல் நலகுறைவாக இருந்தார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக்கொண்டார். நான் தினமும் சென்று பார்த்து வருவேன். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாக தான் பார்த்திருக்கிறேன்.
[3/22, 11:48] Sekarreporter: *அப்போலோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.*

நோயின் தன்மையை பொறுத்து வெளிநாடுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிசிக்சை அளிக்க அரசியல் பிரபலங்களை உயர்சிகிச்சைக்காக அழைத்து செல்வது தவறு இல்லை

தர்மயுதம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே என்றார்.

சசிகலாவின் அழைப்பிதழ் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்றார்.
[3/22, 11:48] Sekarreporter: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் ஓபிஎஸ்.யிடம் நாளையும் விசாரணை நடத்தவுள்ளது

இன்று நடைபெற்ற விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் 3.30 மணி நேரம் விசாரணை நடத்தியது

ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்
[3/22, 11:48] Sekarreporter: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நடைபெற்ற காவேரி கூட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும், அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், அந்த கூட்டத்தில் பங்கேற்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவிடம் கூட்டம் தொடர்பாக கேட்ட பொது, முதலமைச்சர் தனக்கு டிக்ட்டேட் செய்ததாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு, அவரது உடல் நலன் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் தெரிந்துகொள்வேன் என்றார்.

காவேரி கூட்டத்திற்கு பிறகு ஜெயலலிதாவிற்கு இதய பிரச்சனை ஏற்பட்டு உடல் நலனில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது தனக்கு தெரியாது என்றும், ஆனால் அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் நான் முதல்வரின் உடல்நிலை குறித்து விஜயபாஸ்கரிடம் நான் கேட்டதற்கு இதய பிரச்சினை இருந்ததை கூறியாதாக ஓபிஎஸ் ஆணையத்தில் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு இதய பாதிப்பு ஏற்பட்ட போது என்ன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், யார் முடிவு செய்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பாகவும் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.
[3/22, 11:48] Sekarreporter: ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது ? – ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன் – ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் சொன்னதாக ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

மறுநாள் காலை அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தியதாகவும், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விஜயகுமார் ரெட்டி கூறினார் எனவும் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

ஆணையத்தில் ஆஜரான ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதிலளித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர்கள் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

You may also like...