அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர் அதிமுக வில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் சார்ப்பில் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  1. அதிமுக வில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் சார்ப்பில் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும் பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரியும் சசிகலா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

சசிகலாவின் வழக்கை நிராகிரிக்க கோரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும்
கட்சியின் அமைப்பு செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்n

அப்போது,சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்சநீதிமன்றமும்,டெல்லி உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டினர்

அதிமுகவின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதோடு,
இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் தான் உண்மையான அதிமுக என்பது நிரூபணம் ஆகிவிட்ட நிலையில், சசிகலா
உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்ட விவகாரத்தில் நேர் எதிரான கோரிக்கையோடு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்,
மீண்டும் மீண்டும் தவறான நிவாரணம் கோரி வழக்கு தொடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்

சசிகலா அதிமுகவிலே இல்லை என்கிற போது
கட்சியின் உறுப்பினர்கள் விபரம், சொத்து,வைப்பு நிதி,தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது
எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் அதிமுக வில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதிட்டனர்

இன்றோடு அதிமுக தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில்,சசிகலா தரப்பு வாதகங்களுக்காக வழக்கு விசாரணை வரும் 12 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

You may also like...