அஇ அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்துள்ள குற்றவியல் மானநஷ்ட வழக்கு – ஐகோர்ட்டில் அப்பீல் former ag for former cm

[8/23, 15:47] Sekarreporter: *IMPORTANT BREAKING NEWS*

அஇ அண்ணா திமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்துள்ள குற்றவியல் மானநஷ்ட வழக்கில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி கே பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக தனி நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் விஜய நாராயணன் அவர்கள் தனி நீதிமன்றத்தில் முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி தொடர்ந்த வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் துவங்கும் போது (Mention) நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார் நீதிபதி அவர்கள் வெள்ளிக்கிழமை தான் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிப்பதாகவும் இன்று இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்றும் எந்த மனுவையும் தனி நீதிமன்றத்தில் சட்டப்படி தாக்கல் செய்யலாம் எனக் கூறி இன்று கோரிய விசாரணையை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளவில்லை.

Before Hon.Justice Shri. Nirmal Kumar,
CRL OP 15124/21
CRL OP 15123/21.
[8/23, 15:47] Sekarreporter: அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன் வைக்கப்பட்ட முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

இதுசம்பந்தமான அறிக்கை,
இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 24ம் தேதி நேரில் ஆஜராக ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்கு கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

உறுப்பினர் ஒருவரை கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது எனவும், இதை கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நாளை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிபதி நிர்மல்குமார் முன் முறையிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் பட்டியலிடப்படும் என தெரிவித்தார். அதேசமயம், விசாரணை நீதிமன்றத்தில் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதி அனுமதியளித்தார்.

You may also like...