சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம்

[1/4, 11:42] Admk Venkatachalam: திரு. பாண்டியன் அவர்கள் 1979 முதல் 1991 வரை சேரன்மகாதேவி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1980 முதல் 1984 வரை துணை சபாநாயகராகவும் 1985 முதல் 1989 வரை சபாநாயகராகவும் பணியாற்றினார. 1999 முதல் 2004 வரை திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அ.இ.அ.தி. மு.க.வின் முதல் தலைமை கழக நிர்வாகிகளில் ஒருவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கழக சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டவர். கழக அமைப்புச் செயலாளர், அனைத்து உலக எம் ஜி ஆர் மன்ற தலைவர் போன்ற பதவிகளில் இருந்துள்ளார். கழகத்தின் சார்பில் பல வழக்குகளில் ஆஜராகி வாதாடி வெற்றி பெற்றுள்ளார். தற்போது கழக சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தார். தமிழ் நாடு பார் கவுன்சில் உறுப்பினராக 1976 முதல் 1983 வரை பணியாற்றியுள்ளார். இவர் சபாநாயகராக பணியாற்றிய போது சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்று நாட்டுக்கே எடுத்துக் காட்டியவர். இவர் மகன் திரு.P.H.மனோஜ் பாண்டியன் அவர்கள் சேரன்மகாதேவி சட்ட மன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கழக அமைப்புச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
[1/4, 12:05] Sekarreporter: ..

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME