கனிமவள சீராய்வு ஆணைய அதிகாரிகள் இந்தியில் பேசியதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல் முத்துகுமார் கடும் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனிமவள சீராய்வு ஆணைய அதிகாரிகள் இந்தியில் பேசியதற்கு, தமிழ்நாடு அரசு தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சுண்ணாம்பு கல் வெட்டியெடுக்கும் குத்தகைதாரர்களிடம், தண்டத் தீர்வை செலுத்தக் கேட்டு தமிழ்நாடு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து, டெல்லியில் உள்ள ஒன்றிய கனிமவள சீராய்வு ஆணையத்தில், தனியார் சிமெண்ட உற்பத்தியாளர்கள் முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, காணொளி காட்சியில் விசாரணைக்கு வந்தபோது, ஆணைய அதிகாரிகள், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் இந்தியில் பேசியுள்ளனர். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அரசு வழக்கறிஞர், தனக்கு இந்தி தெரியாது என்றும், தனக்கு தமிழ் தெரியும், ஆங்கிலம் தெரிந்தால் பேசுங்கள், தான் பதில் கூறுவதாக தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சீராய்வு ஆணைய அதிகாரிகள் பின்னர் ஆங்கிலத்தில் பேசினர். தமிழ்நாடு அரசு வழக்கறிஞரின் எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்காத ஒன்றிய சீராய்வு ஆணையத்தின் அதிகாரிகளும், வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருந்த ஒன்றிய கனிமவளத்துறை அதிகாரிகளும் கேட்டு திகைப்படைந்தனர்.

சமீபகாலமாக, அரசு துறைகளும், அதிகாரிகளும் இந்தியில் தகவல் பரிமாற்றம் செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில், தமிழ்நாடு அரசும், அரசு அதிகாரிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க தவறுவதில்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com